டிசம்பர் 12
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு, இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (டிச.,12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.