திருப்பூர், டிசம்பர் 12
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தந்தைக்கு இரட்டைத் தூக்குதண்டனையும், 5 பேருக்கு தூக்கு தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேரை தூக்கிலிட திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கான தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார். அதில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஜெகதீசன், மணிகண்டன், மைக்கேல், செல்வக்குமார், தமிழ் கலைவாணன் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தன்ராஜ்-க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.