முறையாகக் குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

கோவை, டிசம்பர் 11

செட்டிபாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



செட்டிபாளையம் அருகே உள்ள கோவை கார்டன் பகுதியில் சுமார் 55-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உள்ளூர் திட்டக் குழும அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், முறையாகக் குடிநீர் விநியோகிக்கக் கோரி செட்டிபாளையம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவை கார்டன் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. இது தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பேசுகின்றனர். தண்ணீர் கிடைக்காமல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...