எழுத்தாளர் பெ.சு.மணிக்கு பாரதி விருது வழங்கி கவுரவித்தது பாரதி பாசறை



கோவை, டிசம்பர் 11




பாரதி பாசறை அமைப்பு சார்பில் எழுத்தாளர் பெ.சு.மணி-க்கு நேற்று மாலை பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



சுதந்திர போராட்ட தியாகியும், முண்டாசுக் கவிஞருமான பாரதியாரின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை கொண்டாடும் விதமாகவும், பாரதியார் குறித்த ஆய்வாளரும், எழுத்தாளருமான பெ.சு.மணி அவர்களுக்கு பாரதி விருது வழங்கும் விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.

பாரதி பாசறை அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

பாரதி பாசறையின் தலைவர் மோகன் சங்கர் பாரதி விருதை பெ.சு.மணிக்கு வழங்கினர்.



தொடர்ந்து பெ.சு. மணி பேசுகையில், "சங்க காலத்தில் அரசு வரிசை அறிதல் முறை வழக்கத்தில் இருந்தது. சிபாரிசின் பேரில் ஒருவரை கவுரவிப்பதை தவிர்த்து, தகுதியான நபர்களை கவுரவிப்பதே இதன் நோக்கம், அதனை பின்பற்றியே தற்போது இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதாக நினைத்து பெருமை கொள்கிறேன். நான் எழுதிய 79 நூல்களில் 29 நூல்கள் பாரதியார் பற்றிய ஆய்வு நூல்கள் ஆகும். தற்போது அதில் 4 நூல்களை பாரதி பாசறைக்கு அளிக்கிறேன். எதிர்காலத்தில் எனது நூல்கள் மற்றும் பாரதியார் எழுதிய பத்திரிக்கைகளையும் வழங்குவேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக பாரதியார் ஆய்வாளரான இளசை மணியன் இயற்றிய "நண்பர்கள் நினைவில் பாரதியார்" என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழார்வளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...