கோவை, டிசம்பர் 10
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார்.
ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிகிடந்தது.
இந்த நிலையில் அந்த நபர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை மீட்டு பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் விசாரித்த போது தனது பெயர் செல்வகுமார் என்றும், காந்திபுரம் பகுதியில் சிலர் அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றதாகவும், இது தொடர்பாக போலீசார் புகார் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது அவரை காவல் நிலையத்தில் வைத்துள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.