என்ன..! கோவையில் இத்தனை ரவுடிகள் இருக்காங்களா?

கோவை, டிசம்பர் 10

   

பின்னணியில் "டமால்-டுமீல்" என்ற சத்தத்துடன் கூடிய பயமுறுத்தும் இசை, "அசால்டு சேது", "பட்டாசு பாலு" என்று பெயருக்கு முன்னால் வகை வகையாய் அடைமொழி, கழுத்தில் கிலோக்கணக்கில் தங்க சங்கிலிகள், வாய்க்குள் புகையிலை, வாய்க்கு வெளியே "பீப்" சத்தம் என ஒரு ரவுடியின் தோற்றத்தை சினிமாக்கள் நமக்கு காண்பித்திருக்கின்றன. 

அவ்வாறு, லுங்கி கட்டிக்கிட்டும், மருகு வச்சிக்கிட்டும் ரவுடிகளை காண்பித்த சினிமா தற்போது கோர்ட்-சூட் போட்ட ஹைடெக் ரவுடிகளை காட்சிப்படுத்தி பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது என்றே கூறிவிடலாம். 

சரி..! டைட்டிலுக்கும், நீ சொல்ல வரதுக்கும் என்னதான் சம்மந்தம்? என்று நினைக்கும் உங்க மைண்டு வாய்ஸ் எங்களுக்கு கேட்குது. சம்மந்தம் இருக்கு.., கீழே படியுங்க.. 

பொதுவாக, கோவை என்றால் "அமைதி-வளம்-வளர்ச்சி" என்ற அழகான வார்த்தைகள் நினைவுக்கு வரும். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் நமது கோவை மாநகரம். சென்னையில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், பினாமிக்கள் மற்றும் சுருட்டிய சொத்துக்கள் என மொத்தத்தையும் பாதுகாக்க ஊருக்கு பத்து பேரை வளர்த்து வைத்திருக்கிறார்கள். எனவே, அந்த ஊர் மக்களுக்கு ரவுடிகள் முகம் மிகவும் பரிச்சயப்பட்ட ஒன்றே. ஆனால், நம்ம ஊரு கோயமுத்தூரு அப்படியா? அமைதியை விரும்பும் 16 லட்சம்  அதிகமான மக்கள் வசிக்கும் மாநகரத்தில், ரவுடிகளை தேடித்தான் எடுக்க வேண்டும். 

ஆனாலும், கோவை மாநகர பகுதிகளில் இத்தனை ரவுடிகள் இருக்கிறார்கள் லிஸ்டு போட்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.

தொடர்ந்து கொலை மற்றும் ஆள் கடத்தல் போன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். அதிகபட்சமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையிலடைக்கப்படும் அந்த நபருக்கு வரலாற்று படிவம் (History sheet) தொடங்கப்படுகிறது. அப்படி, வரலாற்று படிவம் தொடங்கப்பட்ட நபரே போலீசாரால் ரவுடி என்று பெயரிடப்படுகிறார். 

அவ்வாறு கோவை மாநகர பகுதிகளில் மட்டும் கடந்த 1988-ம் ஆண்டு முதல் தற்போது வரை 535 பேரை ரவுடி லிஸ்ட்-ல் சேர்த்திருக்கிறது கோவை மாநகர காவல்துறை.  இந்த எண்ணிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "535 என்ற இந்த எண்ணிக்கை கடந்த 29 ஆண்டுகாலமாக கணக்கெடுக்கப்பட்டது. இதில் சிலர் மரணித்து இருக்கலாம், சிலர் மனம் திருந்தி தொழிலை விட்டு இருக்கலாம், இன்னும் சிலர் சிறையில் இருக்கலாம்" என்றார். 

இதே போல பிக் பாக்கெட் போன்ற சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை 'கேடி' என்ற லிஸ்டில் இணைக்கின்றனர். 'கேடி' என்பது (KD- Known Delinquent).  ஒருவரை செல்லமாய் திட்ட இந்த வார்த்தையை நம் மக்கள் அடிக்கடி  உபயோகிப்பதை கேட்டிருப்போம்.  அதற்கு உண்மையான அர்த்தம் இது தான். 

குற்றவாளிகள் 

இதே போல் குற்றத்தின் தன்மையை பொருத்து பல விதமாக குற்றவாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு வகை 'எப்போதும் குற்றம் செய்து கொண்டே இருப்பவர்'. 

(Habitual Offender) இவ்வகை குற்றவாளிகள் செய்யும் குற்றங்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், தவறு செய்யும் இவரது குணம் மாறாமலேயே இருக்கும். 

குற்றத்தின் தன்மையைப் பொருத்து குற்றவாளிகள் வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு சென்று குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் "இண்டர் ஸ்டேட் கிரிமினல்ஸ்" (Inter State-Criminals) என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். 

இப்படி ரவுடி, கேடி, போன்று பல குற்றவாளிகள் கோவைக்குள் இருக்கிறார்கள். ஆனாலும், நம்ம ஊருக்காரங்க நிம்மதியா இருக்க காரணம்.? 

சந்தேகமே வேணாம். நம்ம மக்களே தான்..!

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...