கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளிக்கிழமை ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவரின் உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
Coimbatore: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் மீது ரயில் மோதியதில் வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த பிரகதீஷ் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயபிரியா. இவர்களது மகன் பிரகதீஷ் (8). இவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையையொட்டி வீட்டில் இருந்து வந்த நிலையில், விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது சைக்கிளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியே சென்றார்.
ஒண்டிப்புதூர் செளடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு நின்று ரயில் வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற பிரகதீஷ் மீது அவ்வழியே வந்த ரயில் மோதியுள்ளது.
இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.