கோவை, டிசம்பர் 09
கோவில்களை இடிக்கப் போவதாகக் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் இருந்து சேலம் செல்லும் வழியில் கோவை ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளை அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களையும் இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசி இருப்பது மதக் கலவரத்தை தூண்டும் செயலாகும். ஜிகாதிகளின் பின்னால் மறைந்து கொண்டு அவர் பேசுகிறார்.
கரூர், மாயவரத்தில் நடந்ததை திருமாவளவன் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தனது சமூக பெண்களைத் தவிர்த்து மற்ற சமூக பெண்களை இழிவாக பேசியவர் திருமாவளவன். கடந்தாண்டு அவர் பெண்களைப் பற்றி பேசியதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கின்றரா..?
கோவில்களை இடிப்போம் எனக் கூறி சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் தமிழக அடைக்க வேண்டும். மேலும், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியைப் போல நல்ல விசயங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமாவளவன் சொல்லி கொடுப்பதில்லை. கடந்த ஆண்டு பெண்களை திருமாவளவன் இழிவாகப் பேசியது நிச்சயம் ஆர்.கே.நகர் தேர்தலில் எதிரொலிக்கும். என்றார்.