காற்றில் விடப்பட்ட பார்க்கிங் கட்டணங்கள் உத்தரவு


கோவை, டிசம்பர் 8

திரையரங்குகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த கட்டணங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் கோவையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் இது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு நிர்ணயப்படி மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், நகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 7 ரூபாய், பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கலாம். இதில் சைக்கிள்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால் கோவையில் உள்ள பெரும்பாலன திரையரங்குகளில் இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் எ. மனோஜ் கூறுகையில், “தமிழக அரசு அறிவித்த கட்டணங்களை கோவையில் உள்ள திரையரங்குகள் இன்னமும் அமல்படுத்தவில்லை. டிக்கெட் விலை உயர்வு, திரையரங்கில் உள்ள உணவுகளின் விலை உயர்வு என பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு டிக்கெட் மற்றும் பார்கிங் கட்டணங்கள் விலையை நிர்ணயம் செய்து உத்தரவிட்டது ஆனால் பார்கிங் கட்டணங்கள் என்ற பெயரில் இன்றும் திரையரங்குகளில் அதிக கட்டணம் தான் வசூலிக்கப்படுகின்றது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் மால்களில் பார்கிங் கட்டணங்கள் வார நாட்களில் ஒரு கட்டணமும், விடுமுறை நாட்களில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது என புகார் தெரிவித்தார்.

மால்களில் கார்களுக்கு ரூபாய் 150 வரையிலும் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 50 வரையும் பார்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மால்களில் திரையரங்குக்கு வருவோர் மற்ற கடைகளிலும் பொருட்கள் வாங்குவதால் பார்கிங் நேரம் அதிகரிக்கின்றது அதனால் தான் பார்கிங் கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படுகிறது. திரையரங்குகளுக்கு தான் தமிழக அரசு பார்கிங் கட்டணம் நிர்ணயத்துள்ளது எனினும் மால்களில் பார்கிங் நெருக்கடி குறைக்கவே விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது, விரைவில் திரையரங்குகிற்கு வருவோருக்கு என பார்கிங் வரையறுக்கப்பட்டு தமிழக அரசின் கட்டணம் வாங்கப்படும் என மாலில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழக அரசு நிர்ணயத்துள்ள பார்கிங் கட்டணங்கள் குறித்த உத்தரவு நகல் இன்னமும் எங்களிடம் வந்து சேரவில்லை. தமிழக அரசின் உத்தரவிற்கு முன்பிருந்தே பார்கிங் கட்டணங்கள் குறைவாக தான் வாங்கப்படுகின்றது, உத்தரவு நகல் கிடைத்தவுடன் பார்கிங் கட்டணங்கள் அமல்படுத்தப்படும்,” என கோவை பாபா காம்ப்ளக்ஸ் சினிமாஸ் மேலாளார் எஸ். கிருஷ்ணா கூறினார்.













Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...