கோவை, டிசம்பர் 6
கோவை தொண்டாமுத்தூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் கல்லூரி மாணவருக்கு செவித்திறன் பாதித்தாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (18), இவரது நண்பர்கள் குன்னத்தூரைச் சேர்ந்த மிதுன் (19), முத்துகுமார் (18),இந்த மூவரும் சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூவரும் கடந்த செவ்வாயன்று தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாதவன் கல்லூரி மாணவர்களின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தக் கூறினார்.
ஆனால் மாணவர்கள் சிறிது தூரம் தள்ளிச் சென்று வாகனத்தை நிறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மாதவன் மிதுனை அடித்துள்ளார். பின்னர் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். வாகனத்தை ஒட்டி வந்த தினேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.
இதனிடையே உதவி ஆய்வாளர் தாக்கியதில் மிதுனின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்த நண்பர்கள் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் மாணவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து வீதிமீறல் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும தவிர தாக்குவது எந்தவகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி தொடர்ந்து கேள்வியெழுப்பிய நிலையில், புகார் கொடுத்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.