ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்க வேண்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 6

ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைத்திட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றக்கோரி இந்து முன்னணி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அந்த இடத்தில் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமாக ஆலையம் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே 1000  க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போரட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

ராமர் கோவில் கட்டுவதற்கு காஷ்மீர் மற்றும் அயோத்தியிலுள்ள முஸ்லீம்கள்  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...