கோவையில் அம்பேத்கர் சிலையை நிறுவ அனுமதியளிக்க வலியுறுத்தி சிலை போல் நின்ற வழக்கறிஞர்கள்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலின் முன்புறம் அம்பேத்கர் போல வேடமணிந்த வழக்கறிஞர்கள் சிலையாக நின்றனர்.



கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதற்கு பல்வேறு அரசுத் துறைகள் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சமூக நீதிக்கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கர் போல வேடம் அணிந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு சிலை போல் நின்றனர்.



இதில் தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனைத்து துறைகளும் அனுமதி அளித்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை மட்டும் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாமல் அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சட்ட மேதை அம்பேத்கர் முக மூடியை அணிந்து வழக்கறிஞர்கள் சிலை போல் நின்றனர்' இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...