பேருந்து ஊழியர்களின் ஆக்கிரமிப்பில் தாய்ப்பால் ஊட்டும் அறை


கோவை, டிசம்பர் 05

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்களுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறையை தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஓய்வறையாக பயன்படுத்தி வருகின்றனர்.



ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற்ற இந்த பேருந்து நிலையத்தில் வண்ணமீன் தொட்டிகள், நவீன இயந்திரக் கடிகாரம், இடை தூக்கி, சூரிய ஒளி மற்றும் காற்று மூலமாக மின் உற்பத்தி செய்யும் திட்டம் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் திறந்துவைத்த சில மாதங்களிலேயே பழுதாகி, யாருக்கும் உபயோகமில்லாமல் தற்போது தூசிப்படிந்து கிடக்கின்றன.

இந்நிலையில், பயணம் செய்யும் தாய்மார்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள தாய்பால் ஊட்டும் அறையை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் பயன்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு, இடையூறு செய்யும் விதமாக பேருந்து ஓட்டுநர்களும் அவர்களின் உதவியாளர்களும் மதிய வேளையில் அறையின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு, ஓய்வெடுப்பதால் அறையை நோக்கி வரும் தாய்மார்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.



‘ஆண் பேருந்து ஊழியர்கள் பலர், தாய்பால் ஊட்டும் அறைக் கதவின் அருகே அமர்ந்துள்ளதால், அறைக்குள் நுழையவே கூச்சமாக உள்ளது. அவர்கள் எழுப்பும் கூச்சலினால் குழந்தை அழத்தொடங்குகிறது. கண்ணாடி கதவுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பும் மிக குறைவே. இவர்களால், தாய்மார்களும், குழந்தைகளும் இந்த அறையை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது’ என்று வேதனையுடன் கூறினார் தினமும் கைக்குழந்தையோடு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்துசெல்லும் திருமதி. கோமதி.

இதுகுறித்து புகாரளித்த பேருந்து நிலைய பெண் ஊழியர் ஒருவர் கூறியதாவது, ‘இரவு நேரங்களில் தாய்பால் ஊட்டும் அறையை மதுக்கூடமாக சிலர் மாற்றுவதால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இருந்தும், பகலில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அறையின் அருகே அமர்ந்து தாய்மார்களை சிரமப்படுத்துகின்றனர். தாய்பால் அறைக்கு முன் ஒரு சிறிய தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட்டால் தான் இதற்கு தீர்வு’ என்று கூறினார்.

மேலும், தாய்ப்பால் அறையை விட்டு நகர்ந்து செல்லச் சொல்லும் பயணிகளையும், பேருந்து நிலைய ஊழியர்களையும் இவர்கள் மிரட்டுவதாகவும் புகாரளித்தார்.

தாய்மார்களை சிரமப்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்களை கடுமையாக தண்டித்து, தாய்ப்பால் ஊட்டும் அறையை பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...