டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 4

டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் ஊழியர்களைக் குறிவைத்து சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை என்றும், சமூக விரோதிகளால் கொள்ளையடித்துச் செல்லப்படும் பணத்தை ஊழியர்களே செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் நிர்பந்திப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார். 

மேலும், தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்களின் மருத்துவச் செலவை நிர்வாகமே ஏற்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தில் இணைத்திட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களிடம் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...