டிசம்பர் 04
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கும் நடிகர் விஷாலுக்கு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அரவிந்த கெஜ்ரிவால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விஷால் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். டெல்லி வரும்போது நாம் சந்திப்போம் எனக் கூறி உள்ளார்.
இது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது:- டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். கெஜ்ரிவாலின் பாதையைப் பின்பற்றி தான் நான் அரசியலுக்கு வந்தேன் எனக் கூறினார்.