கோவை, டிசம்பர் 03
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க கோவை மட்டுமின்றி திருப்பூர், அவினாசி, சேலம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் வ.உ.சி மைதானத்தை நோக்கி திரண்டு வந்தனர். கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் கட்சிக் கொடியோடு வந்திறங்கிய தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டு விழா மேடையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
தொண்டர்களை உற்சாகப்படுத்த அவினாசி சாலை முழுவதும் ஆடல், பாடல் மற்றும் கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சாலையில், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்படிருந்தன.
இந்நிலையில், விழாவில் பங்கேற்க காந்திபுரம் வந்திறங்கிய ஓர் தொண்டர் கூட்டம், மத்திய பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் உள்ள மதுக்கடையை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கியது. ஏற்கனவே, அந்த மதுக்கடை கரைவேட்டிகளால் நிறைந்து வழிந்து கொண்டிருந்ததால், மது பாட்டில்களை கையில் வாங்கிக்கொண்டு ராம்நகர் செல்லும் சாலையில் அமர்ந்து திறந்தவெளியில் குடிக்கத்தொடங்கினர் தொண்டர்கள். இவர்களைப் பார்த்து, அடுத்தடுத்து வந்திறங்கிய தொண்டர்களும், குடிமகன்களும் காளிங்கராயன் தெருவில் நின்றுகொண்டு, திறந்தவெளியில் மது குடித்தனர்.

'காலை 12 மணி முதல் இந்த சாலை திறந்தவெளி மதுக்கடையாய் மாறியிருக்கிறது. ஒரு காவலர் கூட இங்கு வரவில்லை. இவர்களால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்' என்றார் ஓர் ஆட்டோ ஓட்டுனர்.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் மது பாட்டில்களோடு, வாகனங்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூரிலிருந்து வந்திறங்கிய பயணிகளும், பெண்களும் முகம் சுழித்துக் கொண்டே இந்த சாலையை கடந்து சென்றனர். பலர் இந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு வாகனத்தோடு திரும்பிவிட்டனர்.

'நானும் என் மகள்களும் அவினாசியிலிருந்து மிகவும் சிரமப்பட்டு இன்று கோவை வந்துள்ளோம். மேலும், சாலைகளில் நின்றுகொண்டு ஆண்கள் மது குடிக்கின்றனர். எனது மகள்களோடு இந்த சாலையை கடப்பதற்கு அச்சப்பட்டு, ஆட்டோவை அழைத்திருக்கிறேன். விரைவாக இந்த இடத்தை விட்டு கிளம்பவேண்டும்' என்றார் திருமதி. செல்வி.
கண்கள் சொருகிய நிலையில் நின்றுகொண்டே பிரியாணி சாப்பிட்டிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம், யார் பிரியாணி தந்தார்கள்? என்று விசாரித்தபோது, 'ஊரிலேயே பிரியாணி வாங்கிகொடுத்து அழைத்து வந்தார்கள்' என்று உளறி மழலையைப் போல் புன்னகைத்தார். மேலும், மதுக்குப்பிகள் தீரும் முன் வேகமாக வாங்கி குடிக்குமாறு உத்தரவிட்டார்.
மதுகுடித்து விட்டு சென்றவர்கள் குப்பைகளை சாலையில் போட்டுவிட்டு சென்றதால், இந்த சாலையின் ஓரங்கள் மது பாட்டில்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் நிறைந்து கிடக்கிறது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா குப்பைகளும் அகற்றப்படுமா? என்பது கேள்விக்குறியே.