கோவை, டிசம்பர் 3
புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தனித் தீவு போலக் காட்சியளிப்பதாகவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை காக்க தவறவிட்டுள்ளனர் என்றும் சீமான் பேட்டியளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தற்போது ஏற்பட்ட புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. அரசு சார்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, மீட்புப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையற்ற அதிமுக-வினர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கோவையில் ரகுபதி என்னும் இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பேனர் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிற்பதாக அமீர் கூறியது குறித்து நாளை முடிவு செய்வோம். மேலும், அன்புசெழியன் விஷயத்தில் அமீருக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலைப் போல் இந்தத் தேர்தலையும் நடிகர் விஷால் நினைக்கிறார், வரட்டும் பார்க்கலாம். திரைப்படத்துறை பாதுகாப்பு இல்லாத துறையாக இருக்கிறது. வட்டிக்கு பணம் பெற்றுத்தான் இந்தத் துறையில் வேலை பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.