கோவை, டிசம்பர் 2
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் இடம்பெற்றிருந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான 'கட் அவுட் டுகள்' கோவையின் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகில் வரவேற்பு பேனர் ஒன்றை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர்.
அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றனர்.
இந்த சூழலில் இன்று மேலும் ஒரு பிளக்ஸ் பேனரில் இருந்த ஓ.பி.எஸ் பெயர் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
பீளமேடு பகுதியில் இருந்து சிட்ரா செல்லும் சாலையில் அ.தி.மு.க.வினர் அமைத்த பிளக்ஸ் பேனரில் இருந்த துணை முதலமைச்சரின் பெயரை இன்று மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது போல் ஹோப்ஸ் பகுதியில் வைக்கப்பட்ட சில பேனர்களும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
தொடர்ந்து, துணை முதலமைச்சரின் பெயர் கிழித்து சேதப்படுத்தப்படுவது அவரின் ஆதரவாளர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.