கோவையில் முதல்முறையாக குழந்தையின்மை சிகிச்சைக்கு (IMSI) இம்சி சிகிச்சை முறை அறிமுகம்

கோவை, டிசம்பர் 1

சுதா கருத்தரித்தல் மையம் கோவையில் கடந்த எழு ஆண்டு காலமும், ஈரோட்டில் இருபத்தி எட்டு ஆண்டு காலமும் செயல்பட்டு வருகிறது. குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை பிறக்க (IMSI) இம்சி என்கின்ற அதி நவீன சிகிச்சை முறையை கோவையில் முதல் முறையாக இவ்மையம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம்படுத்தியுள்ளது.

இலங்கயை சேர்ந்த நிரோஷா(35) பிரேமதிலகே(45) தம்பதியினர் குழந்தையின்மை சிகிச்சைக்காக இவ்மையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணுகியுள்ளனர். அவர்களுக்கு இம்சி சிகிச்சை முறை மூலம் தற்போது குழந்தை பிறந்துள்ளது.



இதுக்குறித்து இவ்மையத்தின் தலைமை மருத்துவர் தனபாக்கியம் கூறுகையில், ”இந்த அதிநவீன சிகிச்சை முறை கோவையில் முதல்முறையாக அறிமுகம்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பல நாடுகளில் மேற்கொள்ளப்படும் அதிநவீன சிகிச்சை முறை கோவையிலும் மேற்கொள்ளப்படும். குழந்தையில்லா தம்பதியினர் இந்த சிகிச்சையின் மூலம் எளிதில் பயனடைய முடியும்.

இம்சி சிகிச்சை முறை மூலம் ஆண் விந்துவை 6500 மடங்கு உருப்பெருக்கி காட்டப்பட்டு விந்துவில் உள்ள குறைகளை நிக்கி வீரியமான மற்றும் தரமான விந்துவை பெண்ணின் கருமுட்டையில் உட்செலுத்தி குழந்தை உருவாக்க முடியும்,” என்றார்.

இந்த சிகிச்சை முறைக்கு தற்போது சிகிச்சையிக்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூபாய் 25000 செலவாகும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது குழந்தையின்மை அதிகரித்து வருவதற்கு காரணம் மக்களின் வாழ்வு முறையும், உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

அதே போல் “ஆண்கள் தங்களது செல்போன்களை மேல் சட்டையில் வைக்க வேண்டும் எனவும் மடிகணினியை மடியில் வைத்து பயன்படுத்தவும் கூடாது,” எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...