பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்அவுட்களை அகற்றக் கோரி திமுக வழக்கறிஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 1

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை அகற்றக் கோரி திமுக வழக்கறிஞர் அணியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் மூன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விதிமுறைகளை மீறிய கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்றவும், அனுமதி பெற்று இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் அந்த உத்தரவுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. என்று புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அந்த நீதிமன்ற உத்திரவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த திமுக வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற உத்திரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிகரனிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...