ரகுபதி மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி


கோவை, நவம்பர் 30

அ.தி.மு.க.வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற உயிரிழந்த சம்பவத்தில் தமிழ அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



பின்னர், சின்னியம்பாலயத்தில் உள்ள ரகுபதியின் வீட்டிற்குச் சென்ற அவர், ரகுபதியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 



ரகுபதி என்ற இளைஞர் மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர். அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடையிருந்தும் காந்திபுரம் மேம்பாலம் திறக்கப்பட்ட போது ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெயரிட்ட பட்ட பலூன் பறக்க விடப்பட்டதை அனைவரும் அறிவோம்.



நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளும் கட்சி எல்லை மீறி செயல்பட்டு வருகிறது. நான் செயல்தலைவரான போதிலே, பொது மக்களுக்கு இடையூராக இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினேன். அது தி.மு.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது.

ரகுபதி லாரியிலிருந்து தப்பிக்க ஓரம் கட்டியபோது வளைவில் மோதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழக அரசு ரகுபதி-யின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் பொங்கலூர் பழனிச்சமியின் சகோதரர் மகளான வித்யா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்த அவர் இன்று கோவை வந்தார். 

ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள வித்யா-வின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், வித்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை நலம் விசாரித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...