மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களுக்கு நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் நூறு பேர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வு செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய நிலை பரிபோகி உள்ளது. இதனை கண்டித்து மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் முறைகேடாக நிரப்பிய இடங்களை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சமூக நீதிக்கு எதிராக இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் நேரடியாக நியமனம் செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.