கோவை, நவம்பர் 28
வாகன விபத்துகளை குறைக்கும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநகர போலீசார் வாகன ஓட்டிகளிடம் வினியோகித்தனர்.

கோவை மாநகரில் சாலை உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குள்ளும் உள்ள முக்கிய சந்திப்புகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.

நேற்று மாலை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் பாபு துண்டு பிரசுங்களை வழங்கினார்.
அதே போல், இன்று காலை வெரைட்டிஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'இந்தியாவில் நடக்கும் மொத்த விபத்துக்களில் 12 சதவிகித விபத்துகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.