கோவை, நவம்பர் 27
தனியார் பேருந்து நிர்வாகங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து முன்னதாக செல்லவேண்டியிருந்தால், அதற்கு முன்பாகவே பயணிகளை ஏற்றி, அரசு பேருந்து ஒட்டுநரை எடுக்கச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.
மேலும், தனியார் பேருந்தின் நிர்வாகிகள் விரைவாக எடுக்கச்சொல்லி அரசு ஓட்டுநரை நிர்பந்தப்படுத்துவதாகவும், தங்களுக்கான நேரத்தை தாண்டியும் பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருப்பதாகவும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆம்னி மற்றும் ரெகுலர் சர்வீஸ் என்ற பெயரில் அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வைத்து அடியாட்களை கொண்டு பயணிகளை நிர்பந்தித்து ஏற்றுவதாக கூறினர். தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டும் அரசுப்பேருந்து ஒட்டுநர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கொலை மிரட்டல்களும் விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. வசூலை மையப்படுத்தி அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் பயணிகளின் உடைமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனியார் பேருந்து நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் எல்.பி எப்,சி ஐ டியூ உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.