கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

கோவை, நவம்பர் 25

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு வெற்றி வேலன் (9) என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வெற்றி வேலவனுக்கு டெங்குன்காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். 

இதை தொடர்ந்து, அவர் கடந்த புதன்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தனிவார்டில் வைத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று காலை பலியானார். 

டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...