இளைஞரை காவு வாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நுழைவுவாயில் : முறையான அனுமதி பெறவில்லை என அதிகாரிகள் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 25  

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட நுழைவு வாயில் இளைஞர் ஒருவரை பலி வாங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு சார்பில் வரும் டிசம்பர் 3 - ம் தேதி கோவை வ.ஊ.சி   மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்ட நிலையில் அவினாசி சாலையில் விமான நிலையம் தொடங்கி வ.ஊ.சி மைதானம் வரை அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கும்  பணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 



இதில் ஒரு அலங்கார நுழைவு வாயிலை ஹோப் காலேஜ் அருகில் அக்கட்சியினர் அமைத்தனர். 

இந்த நுழைவுவாயில் அமைப்பதற்காக அவினாசி சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டுள்ளது. 6 வழிச்சாலையான அவினாசி சாலையின் 2 பாதைகளை இந்த நுழைவு வாயில் ஆக்கிரமித்துள்ளது. . 

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி. அமெரிக்காவில் பணிபுரியும் இவர் திருமணத்திற்கு பெண் பார்பதற்காக சமீபத்தில் கோவை வந்துள்ளார்.  நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஹோப்ஸ் பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 

இரவு நேரம் என்பதால் சாலையை ஆக்கிரமித்து நுழைவு வாயில் அமைத்தது அவர் கண்ணிற்கு தென்படவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக அந்த அலங்கார நுழைவு வாயிலில் மோதிய ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



உயிரை பலி கொடுத்து அரசு விழா நடத்த வேண்டுமா? அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சியினருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் அலங்கார நுழைவுவாயில் அமைத்ததே விபத்துக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டிய நிலையில், விபத்துக்கு காரணமான அலங்கார நுழைவு வாயில் உடனடியாக அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் K.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மேலும், நுழைவு வாயில் வைப்பதற்கு மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்ற பகீர் தகவலையும் அவர் வெளிட்டுள்ளார். 

இந்த சூழ்நிலையில், ஆளும் கட்சியாகின் எந்த அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெறாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முனைப்பு அ.தி.மு.க. வினரிடையே இருக்கும் வரை தமிழகத்தில் இது போன்ற உயிர்பலிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று பொதுமகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...