கோவை, நவம்பர் 25
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட நுழைவு வாயில் இளைஞர் ஒருவரை பலி வாங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் வரும் டிசம்பர் 3 - ம் தேதி கோவை வ.ஊ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்ட நிலையில் அவினாசி சாலையில் விமான நிலையம் தொடங்கி வ.ஊ.சி மைதானம் வரை அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கும் பணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு அலங்கார நுழைவு வாயிலை ஹோப் காலேஜ் அருகில் அக்கட்சியினர் அமைத்தனர்.
இந்த நுழைவுவாயில் அமைப்பதற்காக அவினாசி சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டுள்ளது. 6 வழிச்சாலையான அவினாசி சாலையின் 2 பாதைகளை இந்த நுழைவு வாயில் ஆக்கிரமித்துள்ளது. .
கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி. அமெரிக்காவில் பணிபுரியும் இவர் திருமணத்திற்கு பெண் பார்பதற்காக சமீபத்தில் கோவை வந்துள்ளார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஹோப்ஸ் பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
இரவு நேரம் என்பதால் சாலையை ஆக்கிரமித்து நுழைவு வாயில் அமைத்தது அவர் கண்ணிற்கு தென்படவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக அந்த அலங்கார நுழைவு வாயிலில் மோதிய ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரை பலி கொடுத்து அரசு விழா நடத்த வேண்டுமா? அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சியினருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் அலங்கார நுழைவுவாயில் அமைத்ததே விபத்துக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டிய நிலையில், விபத்துக்கு காரணமான அலங்கார நுழைவு வாயில் உடனடியாக அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் K.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், நுழைவு வாயில் வைப்பதற்கு மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்ற பகீர் தகவலையும் அவர் வெளிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஆளும் கட்சியாகின் எந்த அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெறாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முனைப்பு அ.தி.மு.க. வினரிடையே இருக்கும் வரை தமிழகத்தில் இது போன்ற உயிர்பலிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று பொதுமகள் கருத்து தெரிவித்துள்ளனர்.