ஆதிதிராவிடர்களுக்கான தாட்கோ திட்டங்களில் பயன்பெறுவோரின் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவம்பர் 24 

தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட இனத்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்படுத்துதல், துரித மின் இணைப்புத் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும், மானியத் திட்டத் தொகையில் 50 %, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதியதவி, இந்தியக் குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி -1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர்/ செலவுக்கணக்கர்/ நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் வரை உள்ளவர்களும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க விரும்புவோர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ ஆதார் அட்டை/ மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் திட்டத்திற்கான TIN எண் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விபரங்களைப் பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைய மேற்குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விபரங்கள் பெற மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர். பாலசுந்தரம் சாலை அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...