குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்து ஏமாற்றும் நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, நவம்பர் 24

மக்களை ஏமாற்றும் நோக்குடன் திருவிழா காலங்களில் பரிசுக் குலுக்கல் அறிவிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வணிக நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பரிசுக் குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையைக் கூட்டி தரமற்ற பொருட்களை விற்பதாகவும், அளவு குறைப்பு, கலப்படப் பொருட்கள், பழைய இருப்பு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் வருகின்றன. வணிகர்களின் இத்தகைய செயல்களினால் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர். 

பொதுமக்களும், நுகர்வோர்களும் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டத்தினை அறிவிக்கும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டங்களை அறிவித்து விளம்பரங்களை வெளியிடும் வணிக நிறுவனங்கள் மீது பரிசு குலுக்கல் (தடை) சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978 மற்றும் தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...