கார்த்திகை தீப திருநாளுக்கு கோவையில் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு

கோவை, நவம்பர் 24

கார்த்திகை தீபத் திருநாளுக்கு 50-க்கும் மேற்பட்ட புதிய வகையான தீப விளக்குகள் கோவையில் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கார்த்திகை தீபத் திருநாள் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் திருநாள் ஆகும். இந்தாண்டு டிசம்பர் 2-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட புதிய வகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் இயந்திரத்தால் செய்யக்கூடிய அச்சு வகை விளக்குகளில் துளசி மாலை விளக்கு, தாமரை விளக்குகள், குத்து விளக்குகள், குபேர விளக்குகள், சாமி உருவம் பதித்த விளக்கு,வண்ணம் பூசிய கலை விளக்கு, வண்ணம் பூசாத கலை விளக்கு போன்றவை பக்தர்கள், பொதுமக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. கையினால் செய்யக்கூடிய கை வகை விளக்குகளில் ஐந்து முகம், ஏழு முகம், ஒன்பது முகம் விளக்கு அதிகம் விற்பனையாகின்றன.

கைகளால் செய்யப்பட்ட வகை விளக்குகளின் விலை ஒரு ருபாய் முதல் 60 ருபாய் வரை உள்ளது. இயந்திரத்தால் செய்யப்பட்ட விளக்குகள் ரூபாய் 60 முதல் 1௦௦௦ வரை விலை உள்ளது.



இது குறித்து மண்கலையகம் கடை உரிமையாளர் சுந்தர் வேணி கூறுகையில், “பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து மண் விளக்குகள் வாங்கப்படுகின்றன. கோவையில் மண் விளக்கு தயாரிக்க ஆட்கள் இருந்தும் போதுமான அளவு, மண் வசதி, இட வசதி மற்றும் பொருளாதாரம் ஆகியவை இல்லாத காரணத்தினால் குறைந்த அளவே மண் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழக அரசாங்கம் மண் விளக்கு தயாரிப்பை ஊக்குவித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் அதைச் சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்,” என்றார்.

இது குறித்து வாடிக்கையாளர் சதீஷ்குமார் கூறுகையில் “புது வகையான மண் விளக்குகள் அழகாக உள்ளன. சென்ற ஆண்டைப் பார்க்கும்போது இந்த ஆண்டு விலையும் குறைவாக உள்ள காரணத்தினால் அதிக அளவில் மண் விளக்குகள் வாங்கி, வீடுகளை அலங்கரிக்க முடியும்” என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...