நவம்பர் 22
மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் அங்கமாலி நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
கேரளாவில் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டடிருந்தார். முதல் குற்றவாளியாக சுனில் என்கிற பல்சர் சுனில் இருந்தார்.
இந்த நிலையில், நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகையை இன்று அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தக் குற்றப்பத்திரிகையில் திலீப் உள்பட 14 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 385 சாட்சிகள் மற்றும் 12 ரகசிய அறிக்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 50 சினிமா உலக பிரமுகர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன், வடிவாள் சலீம், மார்ட்டீன், பிரதீப், சார்லி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.