தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு : 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்


நவம்பர் 20

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உட்பட 7 வழக்குகள் மீதான விசாரணை  வரும் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். 

மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை 20-ம் தேதிக்கு, அதாவது இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதன்படி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன . அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...