கோவை, நவம்பர் 20
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கோவையை பொறுத்தவரையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 60 முதல் 70 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு அனுமதியாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, அம்மருத்துவமனையில் 7 ஆண்கள், 14 பெண்கள், 5 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரங்களை காட்டிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்துள்ளது.
இந்த 30 பேரில் கோவை மாவட்டத்தில் இருந்து 16 பேரும், திருப்பூரில் இருந்து 9 பேரும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 பேரும் திண்டுக்கள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.