ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு

கோவை, நவம்பர் 20: கோவையில் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு கந்தன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அழகர்சாமி என்பவர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகவும், மாதத் தவணையில் பணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார். அழகர்சாமி உறுதியளித்தன் பேரில் லட்சுமியின் சுய உதவிக் குழுக்களில் இருந்தவர்கள் மாதத் தவணையின் அடிப்படையில் பணம் செலுத்தி முடித்துள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிலத்தை அளிக்காமல் ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக, லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் அழகர்சாமிக்குக் காவல்துறையினர் சாதகமாகச் செயல்படுவதாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...