இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி தடுமாற்றம்

நவம்பர் 16

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. காலை முதலே அவ்வப்போது மழை பெய்ததால், மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இதனால், முதல் நாள் ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ், புவனேஷ்வர் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா இடம் பிடித்தனர்.

தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். போட்டித் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்களுக்கு லக்மல் கடும் சவாலாக விளங்கினார். இவர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் டக்-அவுட்டானார். தவானை 8 ரன்னிலும், கேப்டன் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமல் லக்மல் அவுட்டாக்கினார். 

இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னரே முடிவுக்கு வந்தது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...