ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கோவை, நவம்பர் 16: ராஜ்பவனில் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கலாம் என்றும், அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அவர் கூறியதாவது:-

தமிழக ஆளுநர் ராஜ்பவனில் எந்த அதிகாரியையும் அழைத்து பேசலாம். முதலமைச்சர், தலைமை செயலாளரை அழைத்து பேசலாம். ஆனால் அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆளுநர் ஆய்வு நடத்துவது ஜனநாயக மரபல்ல. தற்போதையமுதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் அடிமைகளாக இருக்கின்றனர்.

முன்னாள் ஆளுநர் வித்யாசாகரிடம் அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏ க்கள் கொடுத்த கடிதத்தின் மீது தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கையாளாலாகாத பினாமி அரசாக தமிழக அரசு இருக்கிறது. பிரதமர் மோடியின் அடிமைகளாக முதலமைச்சர், அமைச்சர்கள் இருக்கின்றனர்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு போதுமானதல்ல. கிரைண்டர் உற்பத்திக்கான வரியினை மேலும் குறைக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு, அவர் மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் திறந்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வரட்டும், அதன் பின்னர் அவர் குறித்து பேசலாம்.

ஆறுகளில் மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். சசிகலாவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது மட்டும் போதாது. சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் தரகர்களாக இருந்து பணம் வசூல் செய்து கொடுத்த ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் உண்மை நிலை தெரியும். என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...