குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 வாலிபர்கள் கைது


கோவை, நவம்பர் 15: குண்டர் தடுப்புச்சட்டத்தின் கோவையைச் சேர்ந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அன்று கோவையைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஆனந்தகுமார் என்ற இருவர் செல்வபுரத்தை அடுத்த ஐ.யு.டி.பி. காலனி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.



இந்த கொலை வழக்கு தொடர்பாக சூர்யா, விக்னேஷ் குமார், விஜய்ராஜ், சூர்யா மற்றும் மோகன் ராஜ் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பொது பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறை மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...