முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய ஆளுநரிடம் மனு

கோவை, நவம்பர் 15

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் குறித்து முதமைச்சருக்கு  தெரிவித்து, தீர்வு காணப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்துள்ளதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆளுநரை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தினர் சந்தித்தனர். காலை முதல் காத்திருந்தவர்கள் மாலை ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். 



இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,60 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்களது மனைவிக்கும் அரசு பேருந்துகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மலுமிச்சம்பட்டியில் நிறைவடைந்துள்ள தொகுப்பு வீடுகளை முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளை சந்திக்கவே முடியாத சூழ்நிலையில் தங்களை நேரில் சந்தித்து ஆளுநர் மனுவை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என ஆளுநர் உறுதி அளித்தாக தெரிவித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...