பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை, நவம்பர் 16: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களுக்கு பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி இன்று காலை அம்மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 900 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் 218 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சுமார் 100 மருத்துவ செவிலியர்கள் மருத்துவமனையில் உள்ள முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு பணிச்சுமை மிக அதிகமாக இருப்பதாகவும், செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமிப்பதை தவிர்த்து நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, அங்கு வந்த மருத்துவமனை முதல்வர் P.அசோகன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மருத்துவ செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...