உடுமலை சங்கர் கொலை வழக்கு - டிச.,12-ம் தேதிக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

நவம்பர் 14 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கலப்புத்திருமணம் செய்து கொண்ட வாலிபர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 12-ம் தேதிக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் சங்கர்(22) தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சக கல்லூரி மாணவி கவுசல்யா (19) என்பவரைக் காதலித்து, கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உடுமலைப் பேருந்து நிலையத்தில் வைத்து சங்கர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். காயத்துடன் உயிர்தப்பிய கவுசல்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார். 

இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசாந்த் ஆகிய 11 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கூட்டுச்சதி, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கைதானவர்களில் கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை திருச்சி சிறையிலும், மற்ற 10 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 11 பேர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. உடுமலை சங்கர் கொலை வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 1,500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான 11 பேரும் இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேபோல, நீலகிரி மாவட்டம் குன்னூரில் பணியாற்றி வரும் கவுசல்யாவும் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜ், அடுத்த மாதம் 12-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...