கோவை, நவம்பர் 14
விவசாயிகள் மீது வங்கிகள் நடத்தும் ஜப்தி நடவடிக்கையை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக சூலூர் பேருந்து நிலையம் எதிரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர், திரு. பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, வங்கிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதுபற்றி திரு. பாபு கூறியதாவது, ‘விவசாயிகள் மீது வங்கிகள் நடத்தும் அராஜக ஜப்தி நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து அனைத்து விவசாயிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், பால் விலையை உயர்த்தக் கோரியும், ஜப்தி நடவடிக்கையில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த ஆர்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்துகின்றோம்’ என்றார்.
இந்த ஆர்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும், ஏர்முனை இளைஞர் அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.