கோவை, நவம்பர் 13
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 6 வீடுகள் உள்ளன. 5 குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த வீடுகளுள் ஒன்றில் வசிப்பவர் சுகுணா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று வழக்கம் போல் வீட்டு சமையல் வேலைகளை முடித்துவிட்டு சுகுணாவும் அவரது கணவரும் பணிக்கு புறப்பட்டனர். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
மதியம் 1 மணியளவில் வீட்டில் இருந்து கரும்புகை கசியத்தொடங்கியது. தொடர்ந்து, வீட்டின் கூரையில் தீப்பிடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.
இது தொடர்பாக, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் 5 பேர் கொண்ட தீயணைப்பு படைக்குழுவினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் இருபது நிமிட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, மெத்தை மற்றும் சமையல் பாத்திரங்கள் முற்றிலுமாக எரிந்தன.
தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அருகே தனியாருக்குச்சொந்தமான மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது.
தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிற்கப்பட்டது.