தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை மாநகர் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை - காவல்துறை துணை ஆணையர்

கோவை, நவம்பர். 13: தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மாநகர எல்லைக்குள் அனுமதிப்பதில்லை என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் நடபெறும் விபத்துக்களில் 90 சதவிகித உயிரிழப்புகள்தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தான் ஏற்படுகிறது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் 111 பேர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளால் 71 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 

கோவை மாநகரின் எல்லைப்பகுதிகளில் சரவணம்பட்டி, சின்னியம்பாளையம், திருச்சி சாலை காமாட்சிபுரம், ஈச்சனாரி, பேரூர், சுகுணாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருந்தால் வாகனத் தணிக்கையின் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 

அதோடு, சோதனைச்சாவடிகளின் அருகேயே தலைக்கவசம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு அவர்கள் அதை வாங்கி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். 

அதேபோல், சீட் பெல்ட் அணியாமல் மாநகர் பகுதிகளில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் கார் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வாகனத் தணிக்கை தொடந்து நடைபெறும். மக்களின் நலன் காக்கவே காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...