மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

நவம்பர் 12

தமிழ் திரையுலகில் சமீபத்தில் கால்பதித்த நடிகர் விஜய் சேதுபதி ஒரு சில குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை வென்றதுடன் பல்வேறு சமூகசேவைப் பணிகளையும் செயலாற்றி வருகிறார். அதன்படி, தற்போது அரியலூர் மாணவிகளின் கல்விக்காக ரூ.50 லட்சத்தினை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் அணில் நிறுவனம் சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. தற்போது பாரம்பரியம் மாறாமல் புதுச்சுவையுடன் ‘அணில் ஃபுட்ஸ்’ என்று அறிமுகமாகிறது. நவம்பர் 9-ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை ஆகிய சிறுதானியங்களை மூலப்பொருளாகக் கொண்ட அணில் நிறுவனத்தின் புதிய சேமியா வகைகளை விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.



மேலும், அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய ரகங்களை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் பேசியதாவது:-

“ இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்குக் கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் 38,70,000 ரூபாயும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், மொத்தம் நாற்பது ஒன்பது லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (49,20,000) தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்” என்றார். 



இதனைத்தொடர்ந்து, அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு.கமலஹாசன் பேசுகையில், "தற்போது துரித உணவுகளிலுள்ள ஈர்க்கும் வேதியியல் சுவைக்கு மயங்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், மக்களின் நலனுக்காக மற்றும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில், தரமான, உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.



அரியலூர் எனும் சிறிய மாவட்டத்தில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக விஜய் சேதுபதி இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...