கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் செல்போன் எண்ணை 'ஹேக்' செய்து ரூ. 12.75 லட்சம் கொள்ளை



கோவை, நவம்பர். 12: 

கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). துடியலூர் பகுதியில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். 

இவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12.75 லட்சம் பணம் காணாமல் போனதாக கடந்த வாரம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் செல்போன் சிம்கார்டு வேலை செய்யவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். அப்போது அந்த சிம்கார்டு வேறு ஒரு நபர் உபயோகித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. 

அதே நேரத்தில், சிம்கார்டினை கொண்டு வங்கிக்கணக்கை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் இருந்து இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.  கொள்ளையடிக்கப்பட்ட பணம் லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள இரு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது ஆறுமுகம் வங்கிக்கணக்கில் இருந்து இரு வேறு வங்கிக்கணக்கிற்கு பணத்தினை 'ஆர்.டி.ஜி.எஸ்' இணையவழி பண பரிமாற்றம் மூலமாக கொள்ளையடித்தது தெரியவந்தது.  மேலும், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு வடமாநிலத்தை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது, என்று கூறினார். 

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு யாருக்கு சொந்தமானது? என்பது  தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   வங்கிக்கணக்கில்  இருந்து ரூ.12.75 லட்சம் கொள்ளை போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...