உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வலியுறுத்தி அமைச்சருக்கு கடிதம்

கோவை, நவம்பர் 11:  உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் வனிதா மோகன் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜுன் மாதம் 21-ம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், குறிப்பாக கட்டுமானத்துறையில் ஒப்புதல் எளிதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அமைச்சர் அறிவித்திருந்தீர்கள்.

ஆனால், தற்போது, வீட்டுநல வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதலை அளிக்கின்றன அதனால், இந்த நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கட்டுமானங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்கும்படி, சட்டசபையில் அறிவித்ததைப் போல, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும்.

எங்களதுவேண்டுகோளை ஏற்று உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...