கோவை, நவம்பர் 10: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமேஷ். இவரது மகன் அரத் நிசார் (22). இவர் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி பொதுமக்களிடம் வழிப்பறி செய்து 17 பவுன் தங்க நகைகளக் கொள்ளையடித்துள்ளார்.
இது தொடர்பாக, போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட அரத் நிசாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, சிறையிலடைக்கப்பட்டவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.