கோவை, நவம்பர் 9: கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், மதுக்கரை வன சரகத்திற்குட்பட்ட கரடிமடை எல்லையின் மேற்கு பிரிவில் உள்ள வனப்பகுதியில் யானை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இறந்த யானையை ஆய்வு செய்தனர். பின்னர், யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பிரேத பரிசோதனைக்கு பிறகே யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.
காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.