"வருமான வரித்துறை தினகரனை பணிய வைக்க முயற்சிக்கிறது"

டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில அரசின் துணையோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினரும்,டிடிவி தினகரன் ஆதரவாளருமான ஏ.பி. நாகராஜ் கோவில்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் அம்மா பிம்பத்தை சிதைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக அதிமுக பிளவுபடுத்தப்பட்டதாகவும், அதிமுக கட்சியை அழிக்கும் நடவடிக்கைக்கு பலரும் துணை போனதாகவும் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி பலப்பட்டு விடும் என்பதாலும், சசிகலா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதிமுக பிளவுபட்டு விடுமென்பதாலும்,தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறிய அவர், நீதித்துறையை தவிர்த்த அனைத்து துறைகளும் அரசின் கைப்பாவைகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஒராண்டில் பல வருமான வரித்துறை சோதனைகள் நடந்தாலும், வேண்டப்பட்டவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறிய அவர், சேகர்ரெட்டி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனை எதற்காக நடத்தப்பட்டது? என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

இந்த வருமான வரித்துறை சோதனை மாநில அரசின் துணையோடு நடைபெறுவதாகவும், டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும், வருமான வரித்துறை மிரட்டலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது எனவும் நாகராஜ் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கைப்பற்றும் முயற்சியாக கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...