கொடிசியா அருகே உருவாகியுள்ள கழிவுநீர் குட்டை

கோவை, நவம்பர் 08: கொடிசியாவிலிருந்து கோவை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நீர் வாய்க்காலின் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால், மழைநீரும் கழிவுநீரும் வாய்க்காலின் ஒரு பகுதியில் தேங்கி, நீர் குட்டையாக உருவாகியுள்ளது. இதனால், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை பரப்பும் ஆபத்தான கொசுக்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் புகாரளிக்கின்றனர்.



கொடிசியா மற்றும் அதனை ஒட்டியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், மழைநீரும் இந்த வாய்க்கால் வழியாக வடிந்து அவினாசி சாலை நோக்கி செல்கிறது. இந்நிலையில், சுமார் முப்பது அடி நீளத்திற்கு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொடிசியா வளாகம் அருகிலேயே கழிவுநீர் தேங்கி சாலையை நோக்கி வடியத்தொடங்கியுள்ளது.



‘பல மாதங்களாக இந்த வாய்க்கால் பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர் வடிய வழியின்றி சாலையை நோக்கி வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், வாய்க்காலின் அருகே உள்ள தனியார் நிலத்தின் உரிமையாளர்கள் சிலர், வாய்க்காலின் பாதையில் மண் அடைப்பு ஏற்ப்படுத்தி, கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாக’ குடியிருப்பு வாசிகள் புகாரளிகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், உரிமையாளருடைய தொடர்பு எண்கள் சாமர்த்தியமாக அழிக்கப்பட்டுள்ளன.



‘உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதோடு ஆக்கிரமிப்பாளர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் ஓர் குடியிருப்பு வாசி.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...